Sunday, October 12, 2014


How to get rid of wrinkles

சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது பென்டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திற்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.

பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை 'பார்மட்' செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேலை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய வேண்டும்?

பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்ய வேண்டியது:

1. START > RUN
சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும்.

2.
இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு Command Prompt TM இந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (.ம்.) பி டிரைவ் எனில் H:\> என மாற்றிக்கொள்ள வேண்டும்.

3.
பின்பு H:\>attrib s h /s/d *.* என டைப் செய்ய வேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.

அழிக்க முடியாத பைல்களை அழிக்க:

சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File  என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்க -முடியும்.

1.
அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்து கொள்ள வேண்டும்.

2.
எடுத்துக்காட்டாக சி டிரைவில் mydoc என்ற போல்டரில் உள்ளதெனில் அதன் சரியான path தினை அறிந்துகொள்ள வேண்டும். C:\Documents and Settings\mydoc.txt

3.
பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரீஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options Menu தெரியும். அதில் Safemode With Command Prompt என்பதில் கிளிக் செய்து டாஸ் ப்ரம்ப்டில் நுழைய வேண்டும்.

4.
இனி Command Prompt ல் உள்ள புள்ளியில் cd C:\Documents and Settings என டைப் செய்ய வேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிக்கின்றன.

5.
மேலே கூறியதாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்


Share this

0 Comment to " "

Post a Comment