File
Allocation Table (FAT) என்றால் என்ன?
File Allocation Table
(FAT) என்பது, கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பைல் சிஸ்டம்.
மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் பைல் வடிவமைப்பும் இதுதான். முதலில் பிளாப்பி டிஸ்க்குகளுக்கென இந்த பைல் சிஸ்டம் வடிவமைக் கப்பட்டு, பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹார்ட் ட்ரைவ்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.
முதலில் டாஸ் சிஸ்டம் பைலாகவும், பின்னர், விண்டோஸ் சிஸ்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1980 முதல் 1990 இதுவே, பைல் பார்மட்டாக இருந்தது.
FAT பைல் சிஸ்டம், தற்போதைய நவீன பைல் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவாகத்தான் மதிக்கப்படும்.
இருப்பினும், புதிய கம்ப்யூட்டர் சிஸ்டங்களும் இதனைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, ப்ளாஷ் ட்ரைவ் போன்ற, இணைத்து நீக்கப்படும் மீடியா வகை சாதனங்களுக்கு இந்த பைல் முறை பயன்படுத்தப்படுகிறது
0 Comment to " "
Post a Comment